Latest:
சிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புசிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்பு

செய்தி

ஆட்குறைப்பில் ஈடுபடும் போயிங்..

பிரபல அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்தியாவில் தனது பணியாளர்களில் 180 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான பிங்க் ஸ்லிப்களை அந்நிறுவனம் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் அளித்துள்ளது. இந்தியாவில் போயிங் நிறுவனத்துக்கு 7 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர்., இந்த நிலையில் தங்கள் பணியாளர்களில் 10 விழுக்காடு அளவுக்கு குறைக்க அந்த நிறுவனம் கடந்தாண்டு முடிவெடுத்தது. அதன்படியே, ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது. பெங்களூருவில் உள்ள போயிங் இந்தியா இன்ஜினியரிங் டெக்னாலஜி மையத்தில் 180 பேரை வேலையை விட்டு தூக்குவதற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் போயிங் வெளியிடவில்லை. ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும், பணிகளில் பாதிப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. பழைய பதவிகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு புதிய பதவிகளையும் அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர் சேவை, பாதுகாப்பு, தரக்குறியீடு ஆகியவற்றில் எந்த சமரசமும் இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் பெங்களூருவில்தான் போயிங் நிறுவனம் பெரிய முதலீடு செய்தது. 300க்கும் மேற்பட்ட சப்ளையர்கள் இந்த நிறுவனத்துக்கு பொருட்களை அளித்து வருகின்றனர். அந்த நிறுவன இணையதளத்தின் தகவலின்படி, இந்தியாவில் அந்த நிறுவனம் 1.25 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகத்தை ஆண்டுதோறும் மேற்கொண்டு வருவது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *