பட்ஜெட்–செலவு கணக்கு தயார் செய்யும் நிதியமைச்சகம்…!!
பட்ஜெட்டுக்கு சரியாக 30 நாட்கள் மட்டுமே கையில் இருக்கும் நிலையில் செலவினங்கள் குறித்த பட்டியலை மத்திய நிதியமைச்சகம் சம்பந்தபட்ட துறைகளிடம் கேட்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் என்பது நடப்பு தேசிய ஜனநாயக ஆட்சியின் அரசாங்கத்தின் கடைசி தொடராக இருக்கிறது. இந்நிலையில் வரும் ஜூலை வரை கூடுதலாக எந்த வகையான செலவுகள் இருக்கும் என்று இரண்டாம் கட்ட பட்டியலை கேட்டுள்ளது. சப்ளிமென்டரி கிரான்ட்ஸ் எனப்படும் கூடுதல் செலவினங்களை சரிசெய்ய இந்த பட்டியல் உதவும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் கடந்த 29 ஆம் தேதி கோப்புகளை அனுப்பியுள்ளது. அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் வரும் 8 ஆம் தேதிக்குள் அந்த அறிக்கையை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் இடைக்கால பட்ஜெட் வரும் 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரியை உயர்த்துவது, எவ்வளவு வரியை குறைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இறுதி செய்யும் பணிகளில் பிரதமர் அலுவலகம் தயாரிப்பு பணிகளை செய்து வருகிறது.புதிய பட்டியல் கோரப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் புதிதாக ஏதேனும் செலவு செய்ய வேண்டுமானால் அது ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பரில்தான் செலவு செய்யும் வகையில் புதிய கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.