22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

வோடஃபோன் ஐடியாவுக்கு நிம்மதி..

டெலிகாம் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் வங்கி உத்தரவாதங்களில் சலுகைகள் அளிக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பெரிய நிம்மதி பெறும் நிறுவனமாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் மாறியுள்ளது. இந்த சலுகை என்பது 2022ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஏலத்தில் எடுக்கப்பட்ட அலைக்கற்றைக்கு மட்டுமே என்றும் தகவல் வெளியாகியுள்ளது. டெலிகாம் நிறுவனங்கள் பல காலமாக வங்கி உத்தரவாதத்தில் இருந்து சிறிது காலம் விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசை கோரியிருந்தனர். இந்த நிலையில் அதற்கு டெலிகம்யூனிகேஷன் துறை இசைவு தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட புதிய முடிவுகளின் அடிப்படையில் கடன் உத்தரவாதங்களை நீக்க பரிசீலிக்கப்பட்டது. இப்படி செய்வதன் மூலம் டெலிகாம் துறை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தற்போது சலுகையை அளிக்க உள்ளது. இதனால் டெலிகாம் துறையில் நிதி அழுத்தம் குறைந்து, நிலைத்தன்மை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *