எளிமையின் சிகரமாகும் பிரபலங்கள்..
மிகப்பெரிய தொழிலதிபர்கள் வெட்டி பந்தா காட்டாமல் வாழ்ந்து வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் அண்மையில் நடந்துள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பக்கத்து சீட்டில் யாரென்று பார்த்தால் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி., அவரை பார்த்ததும்,கஜினி பட அசின் போல அனுபவம் கிடைத்ததாக அந்த பயணி சிலாகித்து பதிவுகளை போட்டுள்ளார். நரேன் கிருஷ்ணா என்ற அந்த பயணி, நாராயண மூர்த்தியின் அருகில் அமர்ந்து ,அனுமதியுடன் செல்பியையும் எடுத்துள்ளார். சாதாரண எக்னாமிக் கிளாசில் பயணித்த நாராயண மூர்த்தியை கண்டதும் நரேனுக்கு ஆர்வம் தாங்கவில்லை. அவரிடம் செயற்கை நுண்ணறிவு மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்தும் பேசியதாக நரேன் கூறியுள்ளார். சீனா மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்தும் நரேன் நாராயண மூர்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். முடிவுகளை பற்றி கவலைப்படவேண்டாம் என்று நாராயணமூர்த்தி கூறியதையும் நரேன் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் நிச்சயம் பெரிய தாக்கத்தை வருங்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை நாராயணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மனி ஆற்றலை செயலை 10 முதல் 100 விழுக்காடு உயர்த்தும் என்று ஆருடம் கூறியதாக நரேன் கூறியுள்ளார்.
அவர் நினைத்தால் சொந்த விமானத்திலேயே செல்லும் வசதி படைத்த நாராயண மூர்த்தி மனித நேயம் கொண்டவர் என்று பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் சந்திப்பால் திக்கு முக்காடிப்போன நரேன் தனது லிங்க்டுஇன் பதிவில் இதனை பதிவிட்டுள்ளார். இது வேகமாக பரவி வருகிறது.