நிலைத்தன்மைக்கு இதுதான் காரணமாம்..
இந்தியாவில் வங்கி இல்லாத நிதி நிறுவனங்களுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் ஒரு நெருங்கிய ஒத்துழைப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ராஜேஸ்வர் ராவ் தெரிவித்துள்ளார். தெற்கு பகுதியில் உள்ள மத்திய வங்கிகளின் உயர்மட்ட கொள்கை மாநாட்டில் பங்கேற்ற அவர், வங்கியல்லாத நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி 3 ஆக பிரித்துள்ளதாகவும்,வளர்ச்சி மட்டுமே கொள்கை என்று இருக்கும் எந்த பெரிய நிதி நிறுவனங்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியிருந்தார். அதன்படியே ஆசிர்வாத், அரோஹன், டிஎம்ஐ பைனான்ஸ், நாவி ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்கள் கடன் தர ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இந்தியாவுக்கு 3 மிகப்பெரிய ரிஸ்குகள் இருப்பதாக கூறிய ராவ். ஒன்று கால நிலைய மாற்றம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், என்பிஎப்சி நிறுவனங்கள் நிலைத்து நிற்கும் தன்மை ஆகியவை தான் அந்த 3 ரிஸ்குகள் என்று குறிப்பிட்டுள்ளார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் பொருளாதாரம் மற்றும் நிதித்துறையை பெரிதும் பாதிப்பதாக கூறியுள்ளார். பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு மற்றும் மிஷின் லர்னிங் ஆகிய துறைகளில் வளர்ச்சி இருந்தாலும் அவற்றை பயன்படுத்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். புதுப்புது நிறுவனங்கள் வளர்ந்து வந்தாலும், அவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதித்து நிதி நிலைத்தன்மையை கொண்டுவரப்போவதாகவும், புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கு தடையாக இல்லாமல் இந்த பணிகள் நடக்கும் என்றும் ராவ் கூறியுள்ளார்.