லாபம் இல்லாத நிறுவனங்களின் நிலை மாறுகிறது..
தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்த அளவு லாபத்தை பதிவிடவில்லை. அதாவது 34 நிறுவனங்கள் இதுவரை தங்கள் இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி ஏதும் குறிப்பிடப்படவில்லை.குறைந்தபட்சம் 2 விழுக்காடாவது வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது கூட இல்லை. பிபிசிஎல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிர்ச்சி அளித்தன. இதனால் பிபிசிஎல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசுகி, பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ் இன்ட் வங்கி ஆகியவையின் தரக்குறியீடு குறைந்துள்ளது. அதே நேரம் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி,பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி சீராகவும், தனியார் வங்கிகளின் வளர்ச்சி கலவையாகவும் இருக்கிறது. சில நிறுவனங்களில் நகரங்களில் விற்பனை பாதிக்கப்பட்டாலும் , கிராமங்களில் நல்ல வளர்ச்சியை கொண்டுள்ளன. மருந்து நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்துள்ளன. அதே நேரம் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெரிய சரிவை கண்டுள்ளன. எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு வரும் லாபம் குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.