52,000 பேரை பணிநீக்கும் நிறுவனங்கள்..
லைஃப்ஸ்டைல், காய்கறி, உள்ளிட்ட துறைகளில் 2024-ல் மட்டும் 26,000 பேர் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், டைட்டன், ரேமண்ட்ஸ், பேஜ் அண்ட் ஸ்பென்சர் ஆகிய நிறுவனங்கள் 52 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளனர். விவாசாயத்துறைக்கு பிறகு சில்லறை வியாபாரத்துறையில்தான் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. போதுமான திறமைகளுடன் பணியாளர்கள் கிடைக்காத சூழலில் பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து வேலைக்கு ஆட்களை நிறுவனங்கள் தேர்ந்தெடுத்து வருகின்றன. அதே நேரம் ஷாப்பர்ஸ் ஸ்டாப், டிரெண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிதாக ஆட்களை எடுத்து வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் மக்கள் தேவையில்லாத செலவுகளை வெகுவாக குறைத்துள்ளனர். மேலும் தகவல் தொழில்நுட்பத்தில் மந்த நிலை, உள்ளிட்ட காரணிகளால் பொதுமக்கள் பொருட்களை வாங்கும் அளவும் குறைந்துள்ளது. குறைவான அளவில் பொருட்கள் விற்கப்படும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் கடைகள் விரிவாக்கம் 9 விழுக்காடு ஆக சரிந்துள்ளது. இது மிகவும் மோசமான நிலை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கடையை நடத்துவதற்கு ஏராளமான நிர்வாக திறமை தேவைப்படுவதாகவும், பெரிய பாதிப்பை சந்திக்காமல் கடையை நடத்துவதுதான் சிறந்த முடிவாக இருப்பதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மிகச்சிறந்த நிர்வாக திறமையுள்ள பணியாளர்கள்தான் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் தேவை என்றும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி நெவில் நேரோன்ஹா கூறியுள்ளார்.