மின்சார வாகன விற்பனையில் போட்டி ஆரம்பம்..

நாட்டில் மின்சார கார்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய படைப்புகளான இரண்டு மின்சார கார்களை அறிமுகப்படுத்தியது. மாருதி சுசுகி நிறுவனமும் தனது இ-விடாரா காரின் உற்பத்தியை குஜராத்தில் அடுத்தாண்டு தொடங்க இருக்கிறது. இதனால்இந்தியாவில் கார் உற்பத்தியும், விற்பனையும் மிக அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. அக்டோபர் மாத நிலவரப்படி மின்சார கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 58விழுக்காடு பங்களிப்பை செய்து வருகிறது. இந்த அளவு என்பது கடந்தாண்டு 74விழுக்காடாக இருந்தது. இந்தியாவில் இதுபோன்ற விற்பனை என்பது மிகவும் தாமதமான போட்டி என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே முந்திக்கொண்டு விற்பனை செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டாடா முன்னோடியாக திகழ்கிறது. மிலனில் அண்மையில் மாருதி சுசுகியின் இ-விடாரா கார் காட்சிபடுத்தப்பட்டது. இந்தியாவில் மின்சார கார்கள் உற்பத்தி வேகம் எடுத்தாலும், சார்ஜிங் உள்கட்டமைப்புகள் இல்லாதது பெரிய தடையாக பார்க்கப்படுகிறது. எனினும் கடைசியாக போட்டியில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு இது சாதகமாக மாறியுள்ளது. டாடா நிறுவனத்தின் மின்சார கார்கள் பங்குகள் 400விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே நேரம் மஹிந்திரா நிறுவனம் தார், எக்ஸ்யுவி 500 உள்ளிட்ட படிம எரிபொருள் கார்களை விற்கத் தொடங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் கடந்த ஜூலை முதல் சரிந்து வரும் நிலையில், மாருதி நிறுவன பங்குகள் உயர்ந்து வருகின்றன. நிலைமை இப்படி இருக்கையில் போட்டியில் ஹியூண்டாய் இன்னும் பங்கேற்கவில்லை. அவர்கள் உருவாக்கி வரும் கார்களின் தகவல்கள் பெரியளவில் பட்டியலிடப்படவில்லை.