ரமேஷ் தமானி மிரட்சி..
பங்குச்சந்தைகளில் காம்பவுன்டிங் எனப்படும் முறை 8 ஆவது அதிசயம் என்று ரமேஷ் தமானி குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் இந்த காம்பவுன்டிங் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்., கடந்த 30 ஆண்டுகளில் பங்குச்சந்தைகளில் தாம் கற்றுக்கொண்டதை நிகழ்ச்சி ஒன்றில் ரமேஷ் பகிர்ந்து கொண்டார். விசாலமாக முதலீடு செய்ய அறிவுறுத்திய அவர், பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கம் சாதாரணம் என்றும், காம்பவுன்டிங் ஒரு தலைமுறையையே வறுமையில் இருந்து செல்வந்தராக உயர்த்தும் என்றும், அவர் ஊக்கப்படுத்தினார். காம்பவுன்டிங்கில் உள்ள நுணுக்கங்களை இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இளைஞர்கள் இதனை சரியாக புரிந்துகொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அண்மையில் நிஃப்டி 10% வரை சரிவை கண்ட நிலையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் பங்குச்சந்தையில் இந்த சீர்திருத்தம் இருந்துகொண்டே இருக்கும் என்றார்.
2020ஆம் ஆண்டு இருந்ததை விட இந்திய பங்குச்சந்தைகள் தற்போது மும்மடங்கு ஏற்றம் பெற்றுள்ளது என்றார்.