பேரிச்சைகளுக்கும் கட்டுப்பாடு?
அரபு நாடுகளில் விளையும் பேரீச்சை பழங்கள் முறைப்படி இந்தியாவுக்கு வரி கட்டி இறக்குமதி செய்யப்படுகிறதா என்று இந்திய அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். அரபு நாடுகளில் இருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவை வரி செலுத்தாமல் கடத்தி வருவதாக புகார் எழுந்த நிலையில் அவைகளின் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாகின. இந்த நிலையில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதார நட்புறவு ஒப்பந்தத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, முறைப்படி அரபு நாடுகளில் இருந்து தான் பேரீச்சை வருகிறதா இல்லை பாகிஸ்தானில் இருந்து அரபு நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வருகிறதா என்று அதிகாரிகள் ஆய்வை தொடங்கியுள்ளனர். சிஇபிஏ என்ற ஒப்பந்த்தின்படி அரபு நாடுகளில் இருந்து பேரீச்சைபழங்களை வரி இன்றி இறக்குமதி செய்யலாம். அதே நேரம் இந்த ஒப்பந்தம் இல்லாத நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால் 20 முதல் 30 விழுக்காடு வரி செலுத்த வேண்டும்
அரபு நாடுகளுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடுகள், பாகிஸ்தானில் இருந்து பேரீச்சைகளை இறக்குமதி செய்தால் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 200 விழுக்காடு இறக்குமதி வரியை செலுத்த வேண்டும். விதிகளை மீறி பாகிஸ்தானில் இருந்து அரபு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து வரி செலுத்தாமல் இந்தியாவுக்கு பாகிஸ்தானிய பேரீச்சைகள் வருவதாகபுகார் எழுந்துள்ளது.
இதனயைடுத்தே வணிக, தொழில் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் ஆய்வை தீவிரப்படுத்தினர். சிஇபிஏ ஒப்பந்தத்தின்படி அரபு நாடுகளில் இருந்து மட்டும் 2024 நிதியாண்டில் இந்தியா 277.24 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பேரீச்சை பழங்களை இறக்குமதி செய்துள்ளது. பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள், பேரீச்சை, உலோகங்கள் சிஇபிஏ ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகள் இடையே வணிகம் தடையின்றி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.