டெஸ்லா டீல் மந்தமாக காரணம் தெரியுமா?
உலகளவில் பிரபலமாக உள்ள டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் கைகோர்த்து, தங்கள் புதிய ரக மின்சார காரை விற்க முயற்சிகள் தீவிமடையும் என்று கருதப்பட்ட நிலையில், அதில் ஒரு சிக்கல் நேரிட்டுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதுவரை நிதானமாக செயல்பட மத்திய அரசு கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பிறகு நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆலையை அமைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 40,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உள்ள கார்களுக்கு 100விழுக்காடு வரிவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கும் குறைவாக உள்ள இறக்குமதி செய்யப்பட்ட வரியில் 70 விழுக்காடு வரியாக போடப்படுகிறது.. அதிநவீன பேட்டரிகள் லித்தியம் அயன் பேட்டரிகளை விடவும் திறமை அதிகம் கொண்டதாகும். எவ்வளவோ முயன்றும் டெஸ்லா நிறுவனம் தனது காரை இந்திய சாலைகளில் பயணிக்க அனுமதி கோரி வருகின்றது. போதிய சார்ஜிங் கட்டமைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சார்ஜிங் கட்டமைப்பை ஓரிரு இரவில் செய்து முடிக்க முடியாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பங்கள் இந்தியாவில் சாத்தியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மிகவும் அரிதான நிகழ்வாக டெஸ்லா நிறுவனம், பேனசோனிக் நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பேட்டரி தயாரிப்புகள் மற்றும் மேம்பாட்டுக்கு இந்த பணிகள் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.