தடை செய்யப்பட்டது வேண்டாம்..
கார்பரேட் கடன்கள் குறித்து ஐடிஎஃப்சி நிறுவனத்தின் எம்.டி.யும் தலைமை செயல் அதிகாரியுமான வைத்தியநாதன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் எந்தபிரச்சனையும் இன்றி கடன்களை தருவதாகவும் அவர் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் விதிகளால் வங்கியல்லாத பிற நிதி நிறுவனங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும், தாம் சிறு நிறுவனங்களை ஆதரிக்கப்போவதாகவும் வைத்தியநாதன் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் கெடுபிடிகளால் பாதிக்கப்பட்ட நிதிநிறுவனங்களை விமர்சிக்க விரும்பவில்லை என்று கூறிய அவர், கடினமான இந்த தருணத்தில் அவர்களுக்கு உதவ முன்வருவதாகவும் தெரிவித்தார். தனியார் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதால் தங்கள் நிறுவனத்துக்கு வருவாய் 20.7 விழுக்காடாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கார்பரேட் கடன்களின் அளவு மட்டும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 63,321 கோடி ரூபாய் எனவும் அவர் தெரிவித்தார். 40 ஆயிரம் கோடி ரூபாய் கார்பரேட் கடன்கள் விநியோகிக்கப்பட்ட போதும் ஒரு வாராக்கடன் கூட இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த நவம்பர் முதல் மிகவும் கவனமாக இருப்பதாகவும், ரிசர்வ் வங்கி தடை செய்த நிறுவனங்களுக்கு பெரியதாக எதையும் உதவ வேண்டாம் என்று நினைத்தாலும் கடினமான நேரத்தில் கைகொடுக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். சில பிரிவு கடன்களுக்கு 100-ல் இருந்து 125 அடிப்படை புள்ளிகளாக ரிஸ்க் வெயிட்கள் இருக்கின்றன.