அமெரிக்க டாலருக்கு ஆபத்தா?
யூரோ பசிபிக் சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணராக இருப்பவர் பீட்டர் ஸ்சிஃப். இவர் அண்மையில் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 2025 ஆம் ஆண்டு அமெரிக்க டாலர் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்றும், இதனால், அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக குறைந்து, இறக்குமதி மிகவும் கடினமாகும் என்றும் கூறியுள்ள அவர், இதனால் அமெரிக்காவில் மிகப்பெரிய நிதிச்சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போதைய வேகத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு சென்றால் , அடுத்தாண்டு நிச்சயம் பாதிப்பு இருக்கும் என்றும் பீட்டர் திட்டவட்டமாக எச்சரிக்கிறார். தற்போதைய சூழலில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை இல்லை என்றாலும், விரைவில் ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கணிப்பாகவும் இருக்கிறது. கடந்த 2020-ல் அமெரிக்க டாலர்கள் மதிப்பு வீழ்ந்ததைப்போல அடுத்தாண்டும் இருக்கும் ன்பதே பரவலாக பொருளாதார நிபுணர்கள் கூறும் கருத்தாக உள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தற்போது அமெரிக்க பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம் என்றும், நீண்டகால கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக உயர வாய்ப்பிருப்பதாகவும் பீட்டர் தெரிவிக்கிறார்.