எலான் மஸ்கின் புதிய அறிமுகம்…
டெஸ்லா நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருடன் ஆப்டிமஸ் என்ற ரோபோவும் உடன் வந்தது. இது இணையத்தில் பலராலும் பேசப்படும் செய்தியாக மாறியது.
இதுகுறித்து எலான் மஸ்க் தெரிவிக்கும்போது அந்த ரோபோவுக்கு பெயர் ஆப்டிமஸ் என்றும் விரைவில் ஸ்மார்ட்டான ரோபோக்களை தங்கள் நிறுவனம் உலகளவில் அதிகம் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
கார்கள் உற்பத்தியில் தனித்துவமாக இருக்கும் எலான் மஸ்க் தனது கனவு திட்டமான ஓட்டுநரில்லா தானியங்கி காரின் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
மனிதகுலத்துக்கு பயன்தரக்கூடிய ரோபோக்களை தயாரிக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார். ஒரு சொகுசு காரின் விலையை விட குறைவாக அதாவது 20 ஆயிரம் டாலர்களுக்கும் குறைவாக ரோபோக்களை வடிவமைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள ஹீயூமனாய்டு ரோபோக்கள் அனைத்தும் மூளையில்லாமல் இயங்கி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.உலகத்தில் தானாக நடக்கும் ஆற்றலை இந்த ரோபோக்கள் பெற்றிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்
விரைவில் தயாராக உள்ள ரோபக்கள் வீட்டு வேலைகளை செய்ய இருப்பதாகவும்,நன்கு சமைக்க உள்ளதாகவும்,மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையிலும் இந்த ரோபோக்கள் இருக்கும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.