ஃபின்டெக் நிறுவனங்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர்
ஃபின்டெக் எனப்படும் நிதிசார்ந்த தொழில்நுட்ப நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த்தாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நிதிசார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்துவோர் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் விதியை பின்பற்ற வேண்டும் என்றார்.
கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஆன்லைன் தற்கொலைகள் குறித்து சுட்டிக்காட்டி பேசிய சக்தி காந்த்தாஸ், டிஜிட்டல் முறையில் பணத்தை கடனாக மக்களுக்கு வழங்கப்படுவதை வரவேற்பதாக கூறியுள்ள அவர், விரும்பத் தகாத சிலநிகழ்வுகளையும் சுட்டிக்காட்டினார்.
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் மக்களின் பொருட்களை மீட்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசினார். இந்த நிலையில் எந்த டிஜிட்டல் பண செயலியையும் முடக்கவோ,தண்டிக்கவோ விரும்பவில்லை என்று கூறிய அவர், உரிய விதிகளை அனைத்து தரப்பு வங்கிகளும், ஃபின் டெக் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றார். ஃபின் டெக் நிறுவனங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், ரிசர்வ் வங்கி அவர்களுக்காக இரண்ட்டி எடுத்து வைக்க தயாராக உள்ளதாகவும் கூறினார். வாடிக்கையாளர்களுக்கு சேவை தெளிவாக அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார