வெளியேறினார் பின்னி பன்சால்..
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால் இயக்குநர்கள் குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். சச்சின் பன்சாலுடன் இணைந்து பணியை தொடங்கிய பின்னி, 16 ஆண்டுகளுக்கு பிறகு அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னி வசம் இருந்த பங்குகளும் அண்மையில் விற்கப்பட்டன. ஏற்கனவே சச்சின் பன்சால் தனது பங்குகளை பிளிப்கார்ட்டில் இருந்து ஏற்கனவே விற்றுவிட்டார். தற்போது அவர் நாவி என்ற நிறுவனத்தை நிர்வகிக்கிறார். சச்சின் மற்றும் பின்னியின் பங்குகள் விற்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்நிறுவனம் வால்மார்ட்டிடம் உள்ளது. பின்னி வெளியேறியது குறித்து வால்மார்ட் நிறுவன செயல் துணைத்தலைவர் லெய் ஹாப்கின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். நிறுவனர் என்ற அடிப்படையில் பின்னி இயக்குநர்கள் குழுவில் இடம்பிடித்திருந்தது நல்ல விஷ்யம் என்றும், 2018 ஆம் ஆண்டு வால்மார்ட் நிறுவனம் ஃபிளிப்கார்ட்டில் முதலீடு செய்ததில் இருந்து பின்னியின் பங்களிப்பு சிறந்ததாக இருந்ததாக கூறியுள்ளார். பின்னி மட்டும் தனது பங்கை 1முதல் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவுக்கு விற்றுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு 77 விழுக்காடு பங்குகளை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. ஏற்கனவே போன்பே நிறுவனத்தில் பின்னி பெரிய தொகையை முதலீடு செய்திருக்கிறார். 2007 ஆம் ஆண்டு ஆன்லைன் புத்தக நிறுவனமாக பெங்களூருவில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது ஃபிளிப்கார்ட் நிறுவனம்