சிசிஐயிடம் முறையீடு..
சந்தையில் வேகமாக விற்பனையாகும் பொருட்களுக்கு ஆங்கிலத்தில் எப்எம்சிஜி என்று பெயர். இந்த பொருட்களை விற்கும் விநியோகஸ்தர்கள், இந்திய போட்டி ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர். அதில் துரித வர்த்தகம் மேற்கொள்ளும் சில நிறுவனங்கள் விதிகளை மீறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டு விதிகளுக்கு எதிராக இந்த நிறுவனங்கள் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதமே விநியோகஸ்தர்கள் மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியிருக்கின்றனர். அதில் துரித வர்த்தக நிறுவனங்களால் வழக்கமான சாதாரண வணிகம் பாதிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த புகார்கள் குறித்து மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறையின் கீழ் இயங்கும் DPIIT அமைப்பு, இந்திய போட்டி ஆணையத்துக்கு இந்த புகாரை அனுப்பியிருந்தது. அடிமாட்டு விலைக்கு பொருட்களை விற்பது, அதீத தள்ளுபடி உள்ளிட்டவை வணிகத்தில் உள்ள போட்டியை சமநிலையற்றதாக மாற்றிவிடுகிறது.
அமெரிக்காவில் உள்ள ஸ்டான்டர்ட் ஃபிரான்சைசிஸி ஆக்ட் போன்ற சட்டங்கள் இந்தியாவிலும் தேவை என்றும் அந்த அமைப்பு மத்திய அரசை கோரியுள்ளது. சிறுவணிகர்களை பாதுகாக்கும் முயற்சியாக இந்திய போட்டி ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.