மந்தநிலை; பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்
இந்தியா மற்றும் வட அமெரிக்காவில் Ford Motor Co, 3,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில் 2 ஆயிரம் பேர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்றும் ஆயிரம் பேர் ஒப்பந்த ஊழியர்களாகவும் பணி செய்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. பணியிழப்பு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தளபாடங்கள் விற்பனையாளரான Wayfair அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 5 சதவீதத்தை அதாவது 870 பேரை பணியிழப்பு செய்துள்ளது,
இந்தியாவில் பைஜூஸ் சமீபத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர் உட்பட 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பைஜூக்கு முன், வேதாந்து, அனாகாடமி மற்றும் கார்ஸ்24 உள்ளிட்ட புதிய தலைமுறை நிறுவனங்களும் இந்த ஆண்டு இந்தியாவில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
ஓலா இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் மாதங்களில் சுமார் 2,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஈ-காமர்ஸ் நிறுவனமான மீஷோ 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.