இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பால் நிறுவனங்கள்..
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் பால் நிறுவனங்கள் முதலீடு செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை இந்தியாவில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதிக சலுகைகளுடன் வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பால் உற்பத்தியாளர்களை அச்சுறுத்தும் என்றும் அவர்கள் அச்சப்படுகின்றனர். அதாவது பெரிய விவசாயிகளுக்கு அதிக மாநியம் கிடைக்கும் என்பதே இதன் அர்த்தம். இந்தியாவில் இது அப்படியே தலைகீழானது. இந்தியாவில் பால் உற்பத்தியில் அதிகம் ஈடுபடுவது சிறிய விவசாயிகள்தான். 1990-களில் இந்தியா சமையல் எண்ணெயின் தேவையை 95 விழுக்காடு உள்ளூரிலேயே பூர்த்தி செய்துகொண்டது. பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்களை உள்ளே அனுமதித்ததால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்பட்டு தற்போது இறக்குமதியை நாடியே இந்தியா இருக்கிறது. இந்திய பால்துறையில் வெளிநாட்டு முதலீடுகளை கவனமாக செய்வோம் என்று அண்மையில் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா என்று காத்திருந்து தான் பார்க்கவேண்டும்