உற்பத்தியை அதிகமாக்கும் ஃபாக்ஸ்கான்..

இந்தியாவில் உள்ள பாக்ஸ்கான் ஆலைகளில் 3 கோடி ஐபோன்கள் வரை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு ஒருகோடியே 20லட்சம் ஐபோன்களை பாக்ஸ்கான் நிறுவனம் அசம்பிள் செய்தது. இந்தாண்டு இதனை இரட்டிப்பாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தங்கள் இருப்பை வலுப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம், பாக்ஸ்கான் நிறுவன உதவியுடன் ஐபோன்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஆலையிலும் உற்பத்தியை அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு அதற்கான முதல்கட்ட பணிகள் சென்றுகொண்டிருக்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்து வரும் கட்டண உயர்வு அட்டகாசங்களை பொறுத்து தான் ஆப்பிள் உற்பத்தி இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2025-ல் மட்டும் ஆப்பிள் போன்கள் பாக்ஸ்கான் ஆலையில் 25 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவில் மட்டும் உற்பத்தியை நம்பாமல் , இந்தியாவிலும் உற்பத்தியை தொடங்கியிருப்பது ஆப்பிளின் சாமர்த்தியத்தை காட்டுகிறது. பெங்களூருவில் உள்ள 300 ஏக்கர் ஆலையைத் தொடர்ந்து ஐதராபாத்திலும் ஏர்பாட்களையும் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை மட்டுமின்றின் ஐசிடி மற்றும் மின்சார வாகனங்கள், டிஜிட்டல் சுகாதார பொருட்களையும் உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது. எச்சிஎல் நிறுவனத்துடன் இணைந்து சிப் பேக்கிங் ஆலையையும் பாக்ஸ்கான் 37.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் செய்ய இருக்கிறது. எச்சிஎல் நிறுவனத்துடன் பாக்ஸ்கான் நிறுவனம் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்க இருக்கிறது. இது மட்டுமின்றி எல்அன்ட் டி நிறுவனத்துடனும், தைவானின் சிடிசிஐ நிறுவனத்துடனும் பாக்ஸ்கான் நிறுவனம் கைகோர்க்க இருக்கிறது.