இனி சாப்பாடு, மளிகைப் பொருட்கள் பறந்து வரும்…
இந்தியாவில் டிரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டம் விரைவில் குருகிராம் அல்லது பெங்களூருவில் துவங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேல் வாஸ் சென்னையில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டத்தில் பேசிய அவர், அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த சேவையை செய்ய உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் இந்தமுயற்சிக்காக பல்வேறு டிரோன் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கருடா நிறுவனம் ஸ்விக்கியுடன் கைகோர்த்து முதல் டிரோன் சேவையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்விக்கி நிறுவனம் டிரோன் டெலிவரி மூலம் உணவு அளிப்பதற்காக மென்பொருள் நிறுவனங்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
டிரோன்கள் மூலம் உணவுப்பொருட்கள் டெலிவரி செய்வதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும், இரவு நேரங்களில் டிரோன்கள் இயக்குவதில் உள்ள சிக்கில்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்விக்கி நிறுவனம் டிரோன்களை களமிறக்கினால் தற்போது டெலிவரி செய்யும் முகவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். மேலும் டிரோன்கள் வந்துவிட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்பதையும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.