மைல்கல்லை எட்டிய Fronx
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி தனது புதிய மாடலான fronx என்ற காரை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார், குறுகிய காலகட்டத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு சாதனை மைல்கல்லை எட்டியிருக்கிறது. 10 மாதங்களுக்குள் மட்டுமே இந்த கார் 1 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 24 ஆம்தேதி வெளியான இந்த கார், கச்சிதமான காம்பேக்ட் எஸ்யூவி என்ற இலக்கை எட்டியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 10.4 விழுக்காடாக இருந்த மாருதி சுசுக்கியின் எஸ்யுவி சந்தை பங்கு கடந்தாண்டு 19.7 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். fronx ரக கார்களை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும், மத்திய கிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் பணிகளை மாருதி சுசுக்கி தொடங்கியிருக்கிறது. இதுவரை 9 ஆயிரம் fronx ரக கார்கள் குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன