2025 நிதியாண்டில் மேலும் வளர்ச்சியா?
2025 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான உள்நாட்டு உற்பத்தியை ஃபிட்ச் என்ற நிறுவனம் அரை புள்ளி உயர்த்தியிருக்கிறது. அந்நிறுவனம் ஏற்கனவே 6.5 விழுக்காடாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அடுத்த நிதியாண்டில் இருக்கும் என்று கணித்திருந்தது. அதனை தற்போது அரை புள்ளி உயர்த்தி 7 புள்ளிகளாக மாற்றி அறிவித்துள்ளது.
நிலையான வளர்ச்சி, வணிகம் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை காரணமாக இந்தியாவில் வரும் நாட்களில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 2023 நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் இந்திய பொருளாதாரம் 8.4 விழிக்காடாக இருந்தது. இது கடந்த 18 மாதங்களில் இல்லாத வளர்ச்சியாகும். உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறையில் இந்தியா அசுர வேகத்தில் வளர்வதை இது எடுத்துக்காட்டுகிறது. 2024 நிதியாண்டில் அந்நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சியை 7.8 விழுக்காடு என்று மதிப்பிட்டுள்ளது. இந்திய அரசு கணித்த அளவான 7.6விழுக்காடைவிடவும் இது அதிகமாகும். நடப்பாண்டில் இரண்டாவது பாதியில்தான் ரிசர்வ் வங்கி தனது வங்கிகளுக்கு அளிக்கும் கடன்கள் மீதான வட்டியை குறைக்கும் என்றும் அதுவும் அரை அல்லது முக்கால் புள்ளியே குறையும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 6 கூட்டங்களாக ரிசர்வ் வங்கி தனது ரெபோ வட்டி விகிதத்தை மாற்றாமல் ஆறரை விழுக்காட்டிலேயே வைத்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, அதாவது 4 விழுக்காடுக்கு உள்ளாகவே வைக்க ரிசர்வ் வங்கி உறுதியேற்று அதற்கான பணிகளை செய்து வருவது குறிப்பிடவேண்டிய விஷயமாகும்.