எரிவாயு சரி வராது!!! நாம நிலக்கரிக்கே போயிடலாம்!!!
உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்துள்ள நிலையில் உலகின் பல நாடுகளுக்கும் இயற்கை எரிவாயு செல்வதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இயற்கை எரிவாயு விலையேற்றம் மற்றும் போதிய அளவில் கிடைக்காத சூழலில் ஆற்றல் உற்பத்திக்கு மீண்டும் பழையபடி நிலக்கரியையே நாட வேண்டியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் இதையே செய்ய விரும்புவதாகவும்,எரிவாயுவும் போதிய கையிருப்பு இல்லாத நிலையில் அதனை சமாளிக்க நிலக்கரி தான் சரியான வழியாக உள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகள் பலவும் தற்போது ஆற்றல் உற்பத்திக்கு மீண்டும் நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றன. உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவின் செயல்பாடுகள் காரணமாக சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் இயங்கி வந்த உலக நாடுகள் , தற்போது மீண்டும் படிம எரிபொருட்களை எரிப்பதால் புவிவெப்பமயமாவது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.