ஒன்னு வேலைய விட்டு தூக்குறானுங்க!!!! இல்ல இன்கிரிமென்ட் போடுறாங்க!!! இவங்கள புரிஞ்சுக்கவே முடியல!!!!
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது ஊழிர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் 100%சம்பள உயர்வு அளிக்கிறது பிரிவு ஏ முதல் பி3 வரையிலான பணியாளர்களுக்கு இந்த சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் அந்த நிறுவனத்தின் வருவாய் 22 ஆயிரத்து 540 கோடி ரூபாயாக உள்ளது.இதனால் அந்த நிறுவனத்துக்கு 14.6% லாபம் கிடைத்துள்ளது. வேரியபிள் பே எனப்படும் மாறுபட்ட நிதி அளிப்பு திட்டத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் முதல் டீம் லீடர்கள் வரை பணபலன் அளிக்கப்பட உள்ளது
இதன் மூலம் 93.5% பணியாளர்களுக்கு வேரியபிள் பே கிடைக்கும்.. நிறுவனம் அளிக்கும் புதிய பண பலன்களின் மூலம் அந்த நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் கூடுதல் பணம் கிடைக்கும். வருவாய் அடிப்படையில் அதிக வருவாய் ஈட்டும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் அதன் பணியாளர்களில் 70 %மக்களுக்கு 100% வேரியபிள் பே அளிக்க உள்ளது. இன்போசிஸ் நிறுவனம் 60% பணியாளர்களுக்கு நிதி அளிக்க உள்ளது.