உச்சம் தொட்ட தங்கம் விலை..
இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சத்தை தங்கம் விலை இன்று மார்ச் 21,2024 அன்று தொட்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் முடிவின் காரணமாக தங்கம் விலை இப்படி உயர்ந்துள்ளது. முன்தின விலையை விட 1.8 விழுக்காடு தங்கம் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரு டோரி அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 200 டாலர்கள் என்ற விலையை எட்டியுள்ளது. இதனால் அமெரிக்க டாலர் மதிப்பு குறியீடு 103.22 ஆக சரிந்துள்ளது.
சீனா அதிகளவில் தங்கத்தை வாங்குவதும் இதற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. எம்சிஎக்ஸ் தங்க வருங்கால பத்திரத்தின் விலையும் உயர்ந்துள்ளது. டெல்லி, அகமதாபாத் மற்றும் பிற நகரங்களில் 10 கிராம் தங்கத்தின் விலை 66ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதே நேரம் 1 கிலோ வெள்ளியின் விலை பிற நகரங்களில் 76,500 ஆக உள்ளது. எம்சிஎக்ஸ் கோல்டு பியூச்சர்ஸ் 66,500 ஆக உள்ள நிலையில் ஸ்டாப் லாஸ் 66,350 ஆகவும், பிரைஸ் டார்கெட் 66,850 ரூபாயாகவும் இருக்காலம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதேபோல் வெள்ளி பியூச்சர்ஸின் விலை 76,200 ரூபாயாக இருக்கும்போது வாங்கலாம் என்றும் ஸ்டாப் லாஸ் 75,700 மற்றும் டார்கெட் பிரைஸ் 76,900 ஆக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.