மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை…

இந்திய பங்குச்சந்தைகள், புதன்கிழமை பெரிய ஏற்ற இறக்கமின்றி வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16புள்ளிகள் உயர்ந்து, 81,526புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி32 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 641 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. அமெரிக்க பணவீக்க தரவுகள் வெளியாகும் என்பதாலும், இந்தியாவின் சில்லறை பணவீக்க தரவுகள் வெளியாகும் என்பதாலும் பங்குச்சந்தையில் பெரிய மாற்றமில்லை. தகவல் தொழில்நுட்பத்துறை, ஆட்டோமொபைல் நிறுவன துறைகள் ஏற்றம் கண்டன. அதே நேரம் ஆற்றல் துறையில் பின்னடைவு இருந்தது. 2053 நிறுவன பங்குகள் ஏற்றமும், 1772 நிறுவன பங்குகள் சரிந்தும், 109 பங்குகள் மாற்றமின்றியும் இருந்தன. புதன்கிழமை ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் மேலும் 80 ரூபாய் விலை உயர்ந்து 7285 ரூபாயாகவும், ஒரு சவரன் 58,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 103 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்..