டிரம்ப் செய்த வம்பு, உச்சம் தொட்ட தங்கம்..

அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளும் அச்சத்துடன் எதிர்பார்த்திருந்த பரஸ்பர வரி விதிப்பை டொனால்ட் டிரம்ப் அறுவித்து முடித்தார். அடுத்த சில மணி நேரத்திலேயே முதலீட்டாளர்கள் மொத்த பணத்தையும் தங்கத்தில் குவித்தனர். விரிவடைந்து வரும் வணிகப்போரின் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. ஸ்பாட் கோல்ட் எனப்படும் முறையில் தங்கம் மீதான விலை 0.4%உயர்ந்து 3,145 டாலர்களாக உயர்ந்தது. இது, தங்கத்தின் அதிகபட்ச விலையாக 3,167 டாலர்களாக இருக்கிறது. அமெரிக்க கோல்ட் பியூச்சர்ஸ் 0.1%உயர்ந்து 3,170 டாலர்களாக இருந்தது. எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்காவுக்குள் ஒரு பொருளை விற்க வேண்டுமெனில் அடிப்படையாக 10%வரி செலுத்த வேண்டும், உலகின் பல நாடுகளையும், டிரம்ப்பின் அறிவிப்பு அதிர வைத்துள்ளது. கார் மற்றும் டிரக் விலையேற்றம் உடனடியாக அமலுக்கும் வந்துவிட்டது. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி மே 3 ஆம்தேதி அமலாக இருக்கிறது. இந்தாண்டில் மட்டும் தங்கத்தின் விலை 19 %உயர்ந்துள்ளது. தனியார் பேரோலும் அமெரிக்காவில் உயர்ந்துள்ளது. அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையும் கணிசமாக குறைந்துள்ளது. விவசாயம் அல்லாத சந்தையின் நிலவரத்தை மட்டுமே பலரும் எதிர்பார்த்துள்ளனர். அந்த விவரம் அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட இருக்கிறது.அதேநேரம் ஸ்பாட் சில்வர் எனப்படும் வெள்ளியின் மீதான மதிப்பு 1.2%குறைந்து ஒரு அவுன்ஸ் 33.61 டாலர்களாக உள்ளது. அதே நேரம் பிளாட்டினம் மீதான மதிப்பும் 0.8% வரை குறைந்து 975.93 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
பலாடியத்தின் மதிப்பும் 0.6%குறைந்து 964.56 அமெரிக்க டாலர்களாக உள்ளது.