1500 கோடி ரூபாய் வரி சலுகை பெற்ற டாடா..
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நிறுவனமாக இருந்தது டொகோமோ. இந்த நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் சேவையை வழங்கி வந்தது. இந்த நிலையில் 1500 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்பது தொடர்பாக வழக்கு ஒன்றும் இந்த நிறுவனத்தின் மீது நடந்து வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிஜிஜிஐ அமைப்பு டாடா குழுமத்துக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதித்தது. அதாவது 2017 ஆம் ஆண்டு, டாடா டெலிசர் வீசசசுக்கும் டொகோமோவுக்கும் இடையே 1.27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிவர்த்தனை நடந்தது. அதற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி செலுத்தகோரிக்கை வலுத்தது. கடனாக வாங்கியதற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி செலுத்தியே ஆகவேண்டும் என்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. இது லண்டன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை அடுத்து அளிக்கப்பட்ட தொகை என்றும்,ஜிஎஸ்டி கட்டத் தேவையில்லை என்றும் டாடா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2022-ல் டாடா நிறுவனம் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அட்ஜுடிகேடிங் அதாரிட்டி என்ற நீதிப்பிரிவிலும் டாடா மற்றும் டிஜிஜிஐ நிறுவனங்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்தனர். இதனையடுத்து டாடா சன்ஸ் நிறுவனம் ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்தது. 2009 ஆண் ஆண்டு டாடாவும் டொகோமோவும் இணைந்து பணிகளை செய்து வந்த நிலையில் 2015 ஆம் ஆண்டே டொகோமோ நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.