60.72% ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்பனைக்கு தயார்
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐடிபிஐ நிறுவனத்தினை மத்திய அரசும் எல்ஐசி நிறுவனமும் கையில் எடுத்துள்ளனர். இந்த இருவரிடமும் ஐடிபிஐ நிறுவன பங்குகள் 94 விழுக்காடு உள்ளது. இந்த நிலையில் 60.72 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்ய எல்ஐசியும்,மத்திய அரசும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை பொருளாதார விவகாரங்கள் துறையின் கேபினட் அனுமதி அளித்துள்ளது
இந்த வங்கியின் பங்குகளை வாங்கவிரும்புவோர் ஏலம் கேட்கலாம் என்று முதலீடு மற்றும் பொதுசொத்து நிர்வாகத்துறை அறிவித்துள்ளது, ஐடிபிஐ வங்கியை விற்பனை செய்யும்போது இதற்கான ஏலத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஐடிபிஐ வங்கியை வாங்க விருப்பம் தெரிவிக்க கடைசி நாள் டிசம்பர் 16ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியை விற்பனை செய்ய எல்ஐசி மற்றும் மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ள நிலையில்,தகுதியான நபர்களிடம் வங்கியின் பங்குகளை விற்க எல்ஐசி மற்றும் மத்திய அரசு புரோமோட்டர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது