22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

100 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைகிறதா?

ஏழை எளிய மக்களின் பாரத்தை குறைக்கும் வகையில் 100 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க அமைச்சர்கள் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர், பைசைக்கிள் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி 12 %-ல் இருந்து 5 %ஆக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மருந்து மற்றும் மருந்துப்பொருட்கள் விலைகள் மீதான ஜிஎஸ்டி 12 %-ல் இருந்து குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று மேற்குவங்க நிதியமைச்சர் சந்த்ரிமா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். குளிர்பானங்களின் மீதான ஜிஎஸ்டியை 28 விழுக்காடு பிளஸ் செஸ் வரி சுமத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 5,12,18 மற்றும் 28 % என 4 நிலைகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. அடிப்படை உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியை 12 -ல் இருந்து 5 %ஆக குறைக்கவும், ஹேர் டிரையர், அழகு சாதன பொருட்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு தற்போதுள்ள 18 -ல் இருந்து 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரி வசூலிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு பயன்தருவதாக இருந்தாலும் அரசாங்கங்களுக்கு வரி இழப்பு ஏற்பட இருக்கிறது. வரும் 20 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. மிதிவண்டிக்கு தற்போது 12 % வரி உள்ள நிலையில்,மின்சார சைக்கிள்களுக்கு வெறும் 5 %ஜிஎஸ்டியாக விதிக்கப்படுகிறது. ராஜஸ்தான், உ.பி. கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *