தங்கக் கட்டிக்கு முத்திரை அடுத்தாண்டு முதல் அமல்?
வரும் ஜனவரி மாதம் முதல் தங்க கட்டிக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்லா தங்கத்துக்கும் ஹால்மார்க் முத்திரை அவசியமாகிறது. இந்த கட்டாயமாக்கப்படும் முத்திரை பிடிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிஐஎஸ் என்ற அமைப்பின் கீழ்தான் தங்கத்துக்கான ஹால்மார்க் முத்திரை அளிக்கப்படுகிறது. தங்க நகைகள் செய்வதற்காக நகைக்கடைகள் தங்கக் கட்டிகள் வாங்கும்போது அவற்றிற்கு ஹால்மார்க்கில் இருந்து விலக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் தூய்மையை உறுதி செய்யும் வகையில் தங்கக்கட்டிகளை இறக்குமதி செய்தாலும் அதற்கு ஹால்மார்க் முத்திரை இனி கட்டாயமாகிறது. உலகில் அதிக தங்கம் இறக்குமதி செய்வதில் முன்னணியில் இருக்கும் இந்தியா தற்போது கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது. தங்கக் கட்டிகளுக்கு பிஐஎஸ் , ஹால்மார்க் முத்திரை கட்டாயமாவதால் கள்ளச்சந்தையில் விற்கப்படும் தங்கம் குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.