கடன் சுமையை குறைக்க முயற்சிக்கும் எச்டிஎப்சி வங்கி..
இந்தியாவில் 60 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கடன்களை எச்டிஎப்சி நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது எச்டிஎப்சி வங்கி நிறுவனம், இந்த நிறுவனம் கார்லோன்களை கையாளும் பிரிவு வணிகத்தை 90.6பில்லியன் ரூபாய்க்கு விற்றுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். சில்லறை கடன் விநியோகத்தை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை எச்டிஎப்சி வங்கி கையில் எடுத்துள்ளது. கடன் -டெபாசிட் இரண்டுக்குமான சமநிலையை பெறும் வகையில், இந்த முயற்சியை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கடனை கையாளும் பிரிவு வணிகத்தை மொத்தமாக விற்கும் சம்பவத்தை அந்த வங்கி ஒன்றும் புதிதாக செய்யவில்லை. மாறாக கடந்த ஜூன் மாதத்தில் இதே பாணியில் 50 பில்லியன் ரூபாய் அளவுக்கான கடன் போர்ஃபோலியோவை அந்த வங்கி விற்றுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் கடன்-டெபாசிட் இடையேயான விகிதம் 104%ஆக இருந்தது. எச்டிஎப்சி வங்கியில் டெபாசிட் விகிதம் குறைந்து வரும் நிலையில், பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்கள்.
செப்டம்பருடன் முடியும் காலாண்டில், 13 % அளவுக்கு டெபாசிட் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 8 % லோன்களாக இருக்கும் என்று மக்கியூரி கேப்பிட்டல் என்ற நிறுவனத்தின் அதிகாரி சுரேஷ் கணபதி தெரிவித்துள்ளார்.