மின்சார 3 வீலர் துறையில் குதிக்கும் ஹீரோ..
இந்தியாவில் இருசக்கரவாகனங்கள் உற்பத்தியில் முக்கிய நிறுவனமான ஹீரோ, அல்டி கரீன் நிறுவனத்துடன் இணைந்து மின்சார 3 சக்கரவாகனங்களை உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பஜாஜ் மற்றும் மகேந்திரா நிறுவனத்துக்கு போட்டியாக பணிகளை செய்துவருகிறது. முதல்கட்டமாக 900 கோடி ரூபாய் அளவுக்கு ஹீரோ நிறுவனம் பெங்களூரு நிறுவனத்தில் முதலீடு செய்ய இருக்கிறது. ஏற்கனவே ஏத்தர் நிறுவனத்தில் 40%பங்குகளை வைத்துள்ள ஹீரோ நிறுவனம், இரண்டாவதாக அல்டிகிரீன் நிறுவனத்தில் முதலீடு செய்ய இருக்கிறது. அல்டி கிரீன் நிறுவனம் ஒரு தொழில்நுட்ப நிறுவனமாகும். இது கடந்த நிதியாண்டில் மட்டும் 2800 யூனிட்களை விற்றுள்ளதுடன் 115கோடி ரூபாய் டர்ன் ஓவரையும் காட்டியுள்ளனர். அல்டி கிரீன் நிறுவனத்தின் வாகனங்கள் காய்கனிகள், பால், கோழிக்கறி, கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை சுமந்து செல்லும் வணிக வாகனங்களை முதல்கட்டமாக தயாரித்துள்ளது. 30 டீலர்களை கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் 40 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 55ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறமை பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் உரிமங்கள் தேவைப்படாத நிலையில் தங்கள் நிறுவன வாகனத்துக்கு அதிக வாடிக்கையாளர்கள் வந்துள்ளதாகவும் அல்டிகிரீன் நிறுவனம் கூறியுள்ளது. 2024 நிதியாண்டில் மட்டும் வழக்கமான பெட்ரோல், டீசல் மற்றும் படிம எரிபொருள் இன்ஜின்களுடன் கூடிய சரக்கு ஆட்டோக்கள் 1.21லட்சம் வண்டிகளை மட்டுமே விற்றுள்ளனர். அதேபோல் ஆட்டோ ரிக்சாக்கள் 5.11லட்சம் உயர்ந்துள்ளன. மின்சார ஆட்டோக்கள் ஊடுருவியுள்ளதால் அதன் வளர்ச்சி 2024 நிதியாண்டில் 11% அதிகரித்துள்ளது. மின்சார சரக்கு ஆட்டோக்கள் விற்பனை கடந்த நிதியாண்டில் 14% வளர்ந்துள்ளது. 2030-ல் இதே எண்ணிக்கை 55%ஆக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.