யப்பா ஆள விடுடா சாமி!!!
சீனாவில் கோவிட் ஜீரோ என்ற திட்டம் அமலில் உள்ளது இதனால் பல வர்த்தகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
எந்த பெரிய உற்பத்தியும் செய்வதில்லை.முதலீட்டாளர்களுக்கு சாதகமில்லாத சூழல் உள்ளது.
இதனால் இந்தாண்டில் முதன்முறையாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போட்ட பணத்தை திரும்ப எடுக்க
பங்குகளை விற்று வருகின்றனர்.
இரண்டரை பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றுத்தள்ளியுள்ளதால்
அந்நாட்டு பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டாக் கணெக்ட் என்ற திட்டத்தின் அறிமுகத்துக்கு பிறகு முதன் முறையாக சீன பங்குச்சந்தைகள் பெரிய அளவில் ஆட்டம் கண்டுள்ளன. சீனாவின் அதிபராக மீண்டும் ஷி ஜின்பிங், வந்தது பெரிய பின்னடைவாக காணப்படுகிறது. இதனால் அந்நாட்டு பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்றுவிட்டு லாபத்துடன் வெளியேறிவிட்டனர் டிசம்பரில் சீனாவில் பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக புதிதாக கொள்கைகள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்நாட்டு பங்குச்சந்தையில் 2.9 %பங்கு மதிப்பு திங்கட்கிழமை சரிந்தது.அந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளில் மாற்றம் மற்றும் பொருளாதார சிக்கலை களைய வரும் டிசம்பரில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள் உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.