30விழுக்காடு வளர்ந்தது எப்படி என விளக்குகிறார் வைத்தியநாதன்..
ஐடிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் வைத்தியநாதன், நுன்கடன் அளிக்கும் இந்த நிறுவனம் 30 விழுக்காடு வளர்ச்சி வரை பெற்றுள்ளது கவனம் ஈர்த்தது. இந்த காலாண்டில் தங்கள் நிறுவனத்துக்கு நிறைய கெட்ட விஷயங்கள் நடந்ததாக கூறியுள்ள வைத்தியநாதன். வெப்ப அலை, தேர்தல்கள், தமிழ்நாட்டில் பெரிய வெள்ளம் உள்ளிட்ட அம்சங்கள் நடந்ததாக கூறிய அவர், மற்ற வங்கிகளில் காலதாமதமாக நடக்கும் பணம் செலுத்தும் முறை 4 விழுக்காடு வரை இருந்த நிலையில், தங்கள் நிறுவனத்தில் இது வெறும் இரண்டரை சதவீதமாக இருந்ததாக வைத்தியநாதன் கூறியுள்ளார்.
தங்கள் நிறுவனம் கடன் வழங்கும்போது மிகவும் கவனமாக வழங்குவதாகவும், பெண்களுக்கான கடனை கவனமாக வழங்குவதாக கூறிய வைத்தியநாதன், கடன்களை வழங்குவதை நிறுத்தப்போவதில்லை என்று தெரிவித்தார். உள்கட்டமைப்பு சார்ந்த கடன்களில் 22ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருந்ததாகவும், இந்த கடன்கள் 2,500 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டதாக கூறிய அவர், மும்பைக்குள் நுழையும் சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை வசூலிக்கும் நிறுவனமாக தங்கள் நிறுவனம் இருந்ததாகவும், அரசு அங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்காது என்று அறிவித்ததால், அந்த நிறுவனத்திற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியநாதன் குறிப்பிட்டார். வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறிய வைத்தியநாதன், 30 விழுக்காடு வளர்ச்சி என்பது தங்கள் நிறுவனத்துக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் வலுவலாக வளர்வதாகவும், டெபாசிட் மற்றும் கடன் இரண்டு பிரிவுகளிலும் வளர்ச்சி இருக்க வேண்டும் என்றே தாம் விரும்புவதாகவும் வைத்தியநாதன் குறிப்பிட்டார்.