வருமான வரி தாக்கல் செய்வது இனி EASY!!! எப்படி தெரியுமா?
வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக அவ்வப்போது புதுப்புது வசதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் செய்வது வழக்கம் இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு படிவத்தின் மூலம் வருமான வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ITR1மற்றும்ITR 4ஆகியவையும் தொடரும் என்றும், ITR7முறை தவிர்த்து மற்ற அனைத்துக்கும் மாற்றாக புதிய படிவம் கொண்டுவர நேரடி வரிகள் வாரியம் அரசிடம் முறையிட்டுள்ளது திட்டமிடப்பட்டுள்ள புதிய முறையின் மூலும் வரி தாக்கல் செய்வோருக்கான நேரம் குறைவதுடன், தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்க முடியும் என்றும் மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது 6 பாகங்களாக இந்த புதிய முறையில் தரவுகளை வரி செலுத்துவோர் பதிவிடவேண்டும்.
1) பெயர், வங்கிக்கணக்கு விவரம் உள்ளிட்ட அடிப்படையான தகவல்கள்.
2)சில அடிப்படையான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கேள்விகள் இருக்கும்.
3)ஆம் இல்லை என்ற அடிப்படையில் புதிய படிவத்தில் கேள்விகள் தொடர்புடையவையாக இருக்கும் என கூறப்படுகிறது.
4)படிவங்களை நிரப்பத் தேவையான வழிகாட்டுதல்கள் அதில் இடம்பிடித்திருக்கும்…
5)ஒரு தனித்துவ கட்டம் இந்த படிவத்தில் இருக்கும். இதன் மூலம் வரி செலுத்தும் விவரம் எளிமையாக குறிப்பிடலாம்.
6)குறைந்த அளவு தேவையான விவரங்களை மட்டும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த படிவம் வடிவமைக்கப்படுகிறது.
புதிதாக தயாராகியுள்ள படிவம் குறித்த கருத்துகள் பெறப்பட்டு விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.