வர வர சேல்ஸ் சரியில்ல; உற்பத்தியை நிறுத்திட்டோம்…
இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் பிரபலமடைந்த நிறுவனம் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தியை கடந்த டிசம்பர் 2021-ல் நிறுத்திவிட்டது என்றார். மேலும் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது என்றார்.
புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிராக புதிய வகை தடுப்பூசி மருந்தை தங்கள் நிறுவனம் உருவாக்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.
கோவாவாக்ஸ் என்ற புதிய ஊசியை பூஸ்டராக செலுத்த ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதில் மக்கள் மத்தியில் ஒரு அலட்சியம் இருப்பதாகவும் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
மூக்குவழியாக செலுத்தும் தடுப்பு மருந்தும் விரைவில் வர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியர்களில் 70 விழுக்காடு பேர் கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் செலுத்திக்கொண்டுள்ளனர் என்றார். அடுத்தாண்டுக்குள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான மருந்து 20 லட்சம் டோஸ் மத்திய அரசிடம் அளிக்கப்படும் என்றும் ஆதார் பூனாவாலா
தெரிவித்துள்ளார்.