மஸ்குக்கு சிக்கலா?

செயற்கைக்கோள் சார்ந்த இணையவசதி வழங்கும் அலைக்கற்றையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டும் ஆரம்ப கட்டத்தில் அளிக்க டிராய் நெருக்கடி அளித்துள்ளது. ஆனா் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனமோ 20 ஆண்டுகளுக்கு சலுகை கேட்டதாக கூறப்படுகிறது. ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை பயன்படுத்துவது குறித்து இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில் தனியாக ஒரு நிறுவனமாகமஸ்கின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை. ரிலையன்ஸ் நிறுவனமே 3 ஆண்டுகளுக்குத்தான் ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கும் நிலையில், மஸ்கின் 20 ஆண்டுகள் திட்டத்துக்கு அரசு ஒத்துழைக்கவில்லை. முகேஷ் அம்பானியைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கும் நிலையில், தனது இணைய சேவை வழங்கும் வாடிக்கையாளர்களை மஸ்கின் நிறுவனம் கைப்பற்றிவிடும் என்ற அச்சமடைந்த முகேஷ் அம்பானி, உடனே மஸ்குடன் ஒரு ஒப்பந்தத்தை போட்டு தலைவலியை குறைத்துக்கொண்டார்.
கேபிஎம்ஜி நிறுவனத்தின் மதிப்பின்படி, இந்தியாவின் செயற்கைக்கோள் தொடர்புத்துறையின் வளர்ச்சி வரும் 2028-க்குள் 10 மடங்கு வளர்ந்து 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.