22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

தொடர்ந்து உயர்ந்த இந்திய சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகளில் புதன்கிழமையும் ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியது முதல் சாதகமான சூழல் நிலவியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து 75ஆயிரத்து 449 புள்ளிகளாக வணிகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 22ஆயிரத்து 907 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிந்தது.Shriram Finance, HDFC Life, Apollo Hospitals, Tata Steel, Power Grid Corp ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன.Tech Mahindra, TCS, ITC, Infosys, Britannia Industries.உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய இழப்பை சந்தித்தன.ரியல் எஸ்டேட், ஊடகம், உலோகம், பொதுத்துறை வங்கிகள் நிறுவனபங்குகள் 2புள்ளி 8 விழுக்காடு விலை உயர்ந்தன. Muthoot Finance, Interglobe Aviation, Chambal Fertilisers, Coromandel International, Bajaj Finance உள்ளிட்ட 80 நிறுவனபங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத உயர்வை கண்டன. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்த தங்கம் விலை, நேற்று மீண்டும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்த தங்கம் 8 ஆயிரத்து 290 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 66 ஆயிரத்து 320 ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 114 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ ஆயிரம் ரூபாய் உயர்ந்து 1லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாகவும் விற்கப்பட்டது. இந்த விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும், 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்த்தால் தங்கம் விலை கற்பனைக்கு எட்டாத உயரத்தில் சென்றுவிட்டதை கவனத்தில் கொள்ளவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *