ஓரளவு மீண்ட இந்திய சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 1 ஆம்தேதி பெரிய சரிவு காணப்பட்ட நிலையில், நேற்று இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 593 புள்ளிகள் உயர்ந்து 76ஆயிரத்து 617 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 167 புள்ளகள் உயர்ந்து, 23,332புள்ளிகளாகவும் வணிகம் நேற்று முடிந்தது. FMCG,ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 3 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. Tata Consumer, Zomato, Titan Company, IndusInd Bank, Maruti Suzuki உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. Bharat Electronics, UltraTech Cement, Nestle India, Power Grid Corp and L&T.உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை கண்டன,.Punjab and Sind Bank, Central Bank of India, UCO Bank, Kajaria Ceramics, IOB, Colgate Palmolive, Birlasoft, Metropolis Healthcare, Sona BLW, KEI Industries உள்ளிட்ட 85 நிறுவன பங்குகள்கடந்த ஓராண்டில் இல்லாத சரிவை கண்டன. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் 8 ஆயிரத்து 510 ரூபாயாகவும், ஒரு சவரன் 68ஆயிரத்து 80 ரூபாயாகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் மாறாமல் ஒரு கிராம் 114 ரூபாயாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3%-ம், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.