லேசான ஏற்றத்தில் இந்திய சந்தைகள்..
மார்ச் 20 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள், ஓரளவு ஏற்றத்தை சந்தித்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் முடிவுகள் காரணமாக இந்திய சந்தைகளில் சாதக சூழல் காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 89 புள்ளிகள் உயர்ந்து 72 ஆயிரத்து 101 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 21,839 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவுற்றது. Eicher Motors, Maruti Suzuki, Power Grid Corporation, Nestle India,ONGC உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்தை சந்தித்தன. Tata Steel, Tata Consumer Products, Tata Motors, Axis Bank,Cipla உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை பதிவு செய்தன. ஆட்டோமொபைல், ஆற்றல் மற்றும் எண்ணெய், எரிவாயுத்துறை பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு வரை உயர்வை கண்டன. உலோகத்துறை பங்குகள் ஒரு விழுக்காடு வரை சரிவை கண்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. . ஒரு கிராம் தங்கம் 6140 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 49ஆயிரத்து 120 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 80 ரூபாய் ஆக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 300 ரூபாய் குறைந்து, 80 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்