கார்பரேட்களில் அதிகரிக்கும் முதலீடுகள்..
இந்திய கார்பரேட் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் பெரிய அளவில் உயர்ந்து வரும் நிலையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்திய கார்பரேட் நிறுவனங்கள் கடந்தாண்டு அக்டோபரில் 735மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களை மட்டுமே வெளி சந்தையில் வாங்கி வந்தனர். ஆனால் இந்த தொகை நடப்பாண்டு அக்டோபரில் 5.5பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. நிதிசேவைகள் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து 1.5பில்லியன் அமெரிக்க டாலர் கடன்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த தொகை வெறும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் கடன்களின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கடந்தாண்டு அறிவுறுத்தியதை அடுத்து இப்போது கடன்கள் குறைந்துள்ளன. உதாரணமாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் தன் வசம் இருந்த 470 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாண்ட் எனப்படும் பத்திரங்களில் விற்பனை செய்து நிதி திரட்டியுள்ளது. இந்த பத்திரங்கள் வரும் 2029 ஆம் ஆண்டு முதிர்ச்சியடையும். உடனே 8.78%வட்டியும் கிடைக்கும். 2018-19 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுக்கு பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களில் தற்போதுதான் முதலீடுகளை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதேபாணியில் சோலமண்டலம்,மணப்புரம் பைனான்ஸ், ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதே பாணியில் பணத்தை வளர்க்கின்றனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீிட்டுக்கடன் பிரிவு, ஸ்ரீராம் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்று 2025-ல் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.