இந்திய பங்குச்சந்தையில் மீண்டும் சரிவு
புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஓரளவு மீண்ட நிலையில்,புதன்கிழமை கடுமையாக சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 380 புள்ளிகள் சரிந்து 73,847 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 136 புள்ளிகள் குறைந்து 22,399புள்ளிகாக வணிகம் நிறைவுற்றது. Wipro, SBI, Tech Mahindra, L&T, Trentஉள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. Nestle, HUL, Tata Consumer, Titan Company, Power Grid Corp உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பத்துறை, பொதுத்துறை வங்கிகள் நிறுவன பங்குகள் 2 விழுக்காடு வரை சரிவைகண்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரேநாளில் சவரனுக்கு 1480 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் புதுப்புது உச்சங்களை தொட்டு வந்த தங்கம் விலை, நேற்று சவரனுக்கு1,480ரூபாய் உயர்ந்து 67,280 ரூபாயாக சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் விலை 185 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 8410 ரூபாயாகவும், வெள்ளி விலை கிராம் 2 ரூபாய் உயர்ந்து 104 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும்.

 
			 
							 
							