இந்திய பங்குச்சந்தைகள் பெரிய மாற்றமில்லை..
பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி, இந்திய சந்தைகளில் பெரிய மாற்றம் காணப்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிந்து 72 ஆயிரத்து 152 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1புள்ளி உயர்ந்து 21 ஆயிரத்து 930 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. 1954 நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன, 1314 பங்குள் சரிவை கண்டன. 63 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் முடிந்தன. பாரத ஸ்டேட் வங்கி 4.19விழுக்காடும்,கிராசிம் 2.38விழுக்காடும், எச்டிஎப்சி லைப் 2.24விழுக்காடும், ஜே எஸ்டபிள்யூ நிறுவனம் 2.17விழுக்காடும், ஆக்சிஸ் வங்கி 2.09விழுக்காடு பங்குகளும் உயர்ந்தன. TCS,எச்டிஎப்சி வங்கி மற்றும் அதானி துறைமுகங்கள் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன. பொதுத்துறை வங்கி,ரியல் எஸ்டேட்துறை பங்குகள் ஆகியவை அதிக லாபம் பதிவு செய்தன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகளும் லாபத்தை பதிவு செய்தன. Zaggle Prepaid, UCO Bank, Yes Bank, Triveni Turbine and Canara Bank உள்ளிட்ட நிறுவனபங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 46,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம், முன்தின விலையை விட 20 ரூபாய் விலை உயர்ந்து 5850 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 76 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன், செய்கூலி,சேதாரம் ஆகியவற்றையும் சேர்க்கவேண்டும். செய்கூலி , சேதாரம் உள்ளிட்டவை கடைக்கு கடை மாறுபடும், அதே நேரம் ஜிஎஸ்டி மட்டும் நிலையாக 3 விழுக்காடு வசூலிக்கப்பட்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ளவும்