20%சேமிக்கும் இந்தியர்கள்..
இந்தியர்கள் 20 விழுக்காடு வரை சேமிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது. இந்தியர்கள் அதிக தூரம் பயணப்படவே விரும்பவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இது மட்டுமின்றி உபகரணங்கள் மற்றும் ஷாப்பிங்கில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனராம். மல்டிபிள் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. முதலீடு மற்றும் செலவு இரண்டையும் சேர்ந்து குறிக்கும் சொல்லுக்கு ஸ்பெண்ட்வெஸ்டிங் என்று பெயர். மக்கள் தங்கள் விருப்பப்பட்ட பொருட்களை வாங்கும் அதே நேரம் முதலீடும் செய்கின்றனரா என்பதே இந்த ஆய்வின் நோக்கமாக இருக்கிறது. இந்தியாவில் 26-34 வயதுக்கு உட்பட்டவர்களில் 50 விழுக்காடு அளவுக்கு செலவு மற்றும் முதலீடும் செய்வதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய பொருளாதாரம் 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டிஜிட்டல் பொருளாதாரத்தை எட்டும் நிலையில் இருக்கிறது. இதில் 2000ஆம் ஆண்டுக்கு பிறந்தவர்கள் நிதிநுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவது சிறந்த ஆலோசனையாக கருதுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தங்கம், முதலீடு, பயணம் ஆகிய அனைத்து அம்சங்களும் இந்த ஆய்வறிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த அறிக்கையில் கிரிடிட் கார்டு பயன்பாடு மற்றும் கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாத சூழல் அதிகரித்துள்ளது தெரியவந்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மல்டிபிள் என்ற நிறுவனம், இது போன்ற வித்தியாசமான ஆய்வறிக்கைகளை செய்து வெளியிட்டு வருகிறது.