பிரிட்டானியா விற்பனை மந்தம்?
மக்களின் அன்றாட வாழ்வியலுடன் ஒத்துப்போகும் நிறுவனமாக பிரிட்டானியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அண்மையில் தனது வருவாய் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், தங்கள் நிறுவனத்தின் பொருட்கள் 30 விழுக்காடு அளவுக்கு மட்டுமே நகரங்களில் இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் விரைவில் மந்தம் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.
மெட்ரோ நகரங்களில்தான் குறைவான அளவுக்கு தங்கள் நிறுவன பொருட்கள்விற்பதாக கூறியுள்ளது. பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வாங்க போதுமான அளவுக்கு தேவை ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் விற்பனை 8 விழுக்காடாக உள்ளது. விலை மற்றும் அளவில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாகவும் பிரிட்டானியா நிறுவனம் கூறியுள்ளது. விலையை உயர்த்தாமல் அளவை மட்டும் மாற்றியமைக்கவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டானியா நிறுவனம் பற்றி கருத்து தெரிவித்துள்ள 38 நிபுணர்களில் 19 பேர் அந்நிறுவன பங்குகளை வாங்கலாம் என்றும், 12 பேர் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மீதமுள்ள 7 பேரும் அந்நிறுவன பங்குகளை விற்றுவிடவேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்தாண்டு பிரிட்டானியா நிறுவனத்தின் வருவாய் லாபமாக இல்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி அந்நிறுவனத்தின் பங்கு விலை 5 ஆயிரத்து 210 ரூபாயாக உள்ளது.