மூன்று மடங்கு உயர்ந்த வெள்ளி இறக்குமதி
இந்தியாவின் வெள்ளி இறக்குமதிகள் ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விட தற்போது மும்மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலை சரிந்த பிறகு, வரும் ஆண்டுகளில் தங்கத்தை மிஞ்சும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தற்காலிக தரவுகளின்படி, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வெள்ளி இறக்குமதி முறையே 2,218 டன் மற்றும் 2,773 டன்களாக இருந்தது, இது 2019 ஆம் ஆண்டில் 5,969 டன்களாக இருந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், வெள்ளி இறக்குமதி 110 டன்களில் இருந்து 5,100 டன்களாக உயர்ந்துள்ளது.
முக்கியமாக ஹாங்காங், இங்கிலாந்து, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் நாட்டின் வெள்ளி தேவைகளில் பெரும்பாலானவற்றை இந்தியா பூர்த்தி செய்கிறது.