22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

தங்கத்தால் செய்து, வைரம் பதித்த ஐபோன்!!!! விலை தெரியுமா ???

உலகிலேயே அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன்களாக ஐபோன்கள் திகழ்கின்றன. அண்மையில் வெளியான ஐபோன் புரோ
மேக்ஸ் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாயாகும். இந்த விலையே அதிகம் என்று பலரும் புலம்பி வரும் நிலையில், கேவியர் என்ற நிறுவனம் ஐபோன்களில் புதிய முறையில் வடிவமைத்துள்ளது.ஐபோன் 14 புரோ மாடல் போன்களில் பின் பக்கத்தில் 8 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன, உலகளவில் மொத்தமே 3 ஐபோன்கள் மட்டுமே இந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தவகை ஐபோன்களின் பின்பகுதியில் ரோலக்ஸ் நிறுவனத்தின் கடிகாரமும் பதிக்கப்பட்டுள்ளன இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1.1 கோடி ரூபாயாகும். குறிப்பிட்ட ரோலக்ஸ் நிறுவனத்தின் கடிகாரத்தில் 18 காரட் தங்கம், வைரமும் பதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கேவியர் நிறுவனம் ஆடம்பரமான பொருட்களை தயாரிப்பதில் தனித்துவமாக திகழ்ந்து வருகிறது. ஐபோன்களின் பின்பகுதியில் டைனோசர்களின் பல்,18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட ஏர்பாட் மற்றும் டெஸ்லா ஐபோன்கள் ஆகியவற்றை கேவியர் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. தனித்துவமான ஐபோன்களை உற்பத்தி செய்யும் கேவியர் நிறுவனம் உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *