புதிய இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு IRDAI கட்டுப்பாடு
இந்தியாவில் இன்சூரன்ஸ் பாலிசிகள் தொடர்பான கட்டுப்பாட்டு அமைப்பு ஐஆர்டிஏஐ. இந்த அமைப்பு இன்சூரன்ஸ் தொடர்பான புதிய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பதிவேற்றுவதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.இந்தாண்டு இறுதியில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது
வர்த்தகத்தை மேம்படுத்தவும், பாலிசி எடுத்துள்ளோருக்கு புரியும் வகையில் இதனை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் IRDAI கூறியுள்ளது.இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி என்ற முறை மூலம் இந்த தரவுகள் மின்மயப்படுத்தப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இ-கே ஓய்சி எனப்படும் மின்னணு வடிவலான வாடிக்கையாளர்கள் விவரத்தை இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி நிர்வகிக்கிறது. இதன் மூலம் பல லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைய உள்ளனர். இந்த ரெபாசிட்டரியை NSDL நிர்வகிக்கிறது.
காப்பீட்டுத் துறையின் சேவையை மேம்படுத்தவும், எளிமையாக்கவும் இந்த புதிய திட்டம் அறிமுகப்பத்தப்பட உள்ளதாக irdai அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்